மேலும் செய்திகள்
தனியார் ஊழியர் வெட்டி கொலை
22-Jun-2025
சேலம்: சேலம், கோரிமேடு அருகே அய்யா நகரை சேர்ந்தவர் கோபாலகி-ருஷ்ணன், 75. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். கடந்த மாதம், 19ல், பெங்களூருவில் உள்ள மூத்த மகன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தி-ருந்தது. அக்கம் பக்கத்தினர் தகவல்படி, கோபாலகிருஷ்ணன் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 30,000, 2.5 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்-கின்றனர்.
22-Jun-2025