மூதாட்டியிடம் நகை பறிப்பு
சேலம் :சேலம், சிவதாபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள், 65. சித்தர் கோவில் பகுதியில், கம்மங்கூழ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் கடையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த ஒருவர், சிவதாபுரம் வரை, 'லிப்ட்' தருவதாக அழைத்துச்சென்றார். ஆனால் இரும்பாலை தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் பகுதிக்கு அழைத்துச்சென்று, இறக்கிவிட்டுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த, 2.5 பவுன் நகையை பறித்து கொண்டு, பைக்கில் தப்பினார். மாரியம்மாள் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.