உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 வீடுகளில் நகைகள் ரூ.1 லட்சம் திருட்டு

2 வீடுகளில் நகைகள் ரூ.1 லட்சம் திருட்டு

ஓமலுார், டிச. 22-ஓமலுார் அருகே பாகல்பட்டி, ஓம்சக்தி நகர், 'ஏ' பிளாக்கில் வசிப்பவர் ஜானகிராமன், 63. மத்திய அரசின் காபி போர்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி, 60. கடந்த, 14ல், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு, தம்பதியர் வந்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 100 கிராம் வெள்ளி, 5,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து ஜானகிராமன் புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.அதே பகுதி, 'சி' பிளாக்கில் வசிப்பவர் பாஸ்கர், 64. இவரும் வெளியூர் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய நிலையில், அவரது வீட்டில், 3.5 பவுன் நகைகள், 1 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !