உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் கேட்டு காடையாம்பட்டி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு காடையாம்பட்டி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு காடையாம்பட்டிபி.டி.ஓ., அலுவலகம் முற்றுகைகாடையாம்பட்டி, செப். 28-நான்கு மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என, புதுார் கிராம மக்கள், பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.காடையாம்பட்டி தாலுகா, குண்டுக்கல் ள்ளது. கடந்த, நான்கு மாதங்களாக குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இரண்டு முறை மட்டுமே டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை, காடையாம்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட நுாற்றுக்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். அப்போது தீவட்டிப்பட்டி போலீசார் மக்களிடம் பேசி, சமாதானம் செய்து பாதி பேரை தடுத்து நிறுத்தினர். 40க்கும் மேற்ப்பட்டோர் மட்டும் காடையாம்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, தண்ணீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும், 30ம் தேதிக்குள் குழாய்கள் சரி செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து நேற்று மாலை, குழாய்களை சரி செய்யும் பணி துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி