உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்

கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்

ஓமலுார், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை ஒட்டி, சேலம் பெரியார் பல்கலையில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நேற்று, இளைஞர் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டது. மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி, அப்துல் கலாம் குறித்து பேசினார். புவியியல் துறை பேராசிரியர் வெங்கடாசலபதி, 'அப்துல்கலாம் முன்வைத்த யோசனைகள்' தலைப்பில் பேசினார். 100க்கும் மேற்பட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை