உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் நிதி நிறுவன முன்னாள் ஊழியர் கடத்தல்

தனியார் நிதி நிறுவன முன்னாள் ஊழியர் கடத்தல்

சங்ககிரி: சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் சையத் இர்சாத், 38. இவருக்கு திருமணமாகி, 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர், சேலத்தில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். 5 மாதங்களுக்கு முன், அது மோசடி நிறுவனம் என, மக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து, அதன் நிறுவனர் ராஜேஷை, போலீசார் கைது செய்தனர். பின் அந்நிறுவனம் மூடப்பட்டது.இதையடுத்து சையத் இர்சாத், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் கடந்த, 1ல் திருப்பூரில் இருந்து சேலத்துக்கு கால் டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார். சங்ககிரி, வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில், மதியம், 12:30 மணிக்கு ஒரு பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தவர்கள், சையத் இர்சாத்தை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து கால் டாக்ஸி ஓட்டுனர் கொடுத்த தகவல்படி, சையத் இர்சாத்தின் தந்தை இசாக், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !