ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கொங்கு இளைஞர் ஆர்ப்பாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தகொங்கு இளைஞர் ஆர்ப்பாட்டம்சேலம், அக். 10-தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் தனியரசு தலைமை வகித்தார். அதில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில, அரசுகள் உடனே நடத்தக்கோரி, கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து தனியரசு நிருபர்களிடம் கூறியதாவது:நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. பிற்படுத்தப்பட்டோர் தமிழகத்தில், 80 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தலாம் என உரிமை உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. அனைத்து சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு உரிமைகளை மீட்கும்படி, உடனே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.நாடு முழுதும் உள்ள, 90 சதவீத பெரும்பான்மையின மக்கள், உரிமைகளுக்கு போராடும் நிலை உள்ளது. ஆனால், 10 சதவீதம் உள்ள சிறுபான்மையினருக்கு அனைத்து சலுகைகளும் எளிதாக கிடைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.