உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூலமேடு ஜல்லிக்கட்டு ஆலோசனை

கூலமேடு ஜல்லிக்கட்டு ஆலோசனை

ஆத்துார்: ஆத்துார் அருகே, கூலமேடு கிராமத்தில் வரும், 17ல், பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதன் ஏற்-பாடுகள் குறித்து ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, வாடிவாசல், பேரிகார்டு அமைத்தல், கால்நடைக-ளுக்கு மருத்துவ வசதி, மருத்துவ முகாம் போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு விழா நடத்த, விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என, ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். தாசில்தார் பாலாஜி, ஜல்லிக்கட்டு விழா குழுவினர், பொதுப்பணித்துறை, மின்வா-ரியம், வருவாய், கால்நடை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை