கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து 34,567 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, 34,567 கன அடியாக அதிகரித்தது.கர்நாடகாவின், கே.ஆர்.எஸ்., கபினி, ேஹரங்கி, ேஹமாவதி அணைகள் முறையே, மொத்த நீர் இருப்பு, 49.42, 19.5, 8.5, 37.10 டி.எம்.சி., தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கபினி அணைக்கு நேற்று வினாடிக்கு, 18,696 கனஅடி நீர் வந்தது.நீர் இருப்பு, 17.25 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை பாதுகாப்பு கருதி இரு நாட்களாக வினாடிக்கு, 25,000 கனஅடி நீர், கபிலா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.நேற்று ேஹரங்கி அணை நீர் இருப்பு, 5.74 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 7,888 கனஅடி நீர் வந்த நிலையில், 12,166 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.அந்த நீர், கே.ஆர்.எஸ்., அணைக்கு செல்வதால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 16,936 கனஅடியாக இருந்தகே.ஆர்.எஸ்., நீர்வரத்து, நேற்று, 34,567 கனஅடியாக அதிகரித்தது.கே.ஆர்.எஸ்., அணை நீர் இருப்பு, 38 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப, 11 டி.எம்.சி., தேவை. வரத்தில் இதே நிலை நீடித்தால், அணை அதிகபட்சம், 5 நாளில் நிரம்பும். அந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், நேரடியாக மேட்டூர் அணைக்கு வரும்.ஏற்கனவே, கபினி அணையில் திறக்கும் நீர், காவிரியில் வரும் நிலையில், கே.ஆர்.எஸ்., அணையில் உபரி நீர் திறந்தால், மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு, 6,829 கன அடி நீர் வந்தது.வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 84.41 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 83.94 டி.எம்.சி.,யாக சரிந்தது.