மேலும் செய்திகள்
ரூ.2.57 கோடியில் கட்டடங்கள் திறப்பு
26-Sep-2024
மேட்டூர்: இரு சுகாதார வளாகம் கட்டிய கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்துக்கு அமைச்சர் பட்டயம் வழங்கி வாழ்த்தினார்.கடந்த, 14ல் மேட்டூர் வட்டம், பெரியசோரகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரம், மருத்துவ கல்வி, மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, சேலம் மாவட்டத்தில், 7.04 கோடி ரூபாய் செலவில் கட்டிய சுகாதார வளாகங்களை திறந்து வைத்தார்.மேட்டூர் வட்டம், மேட்டூர் நகராட்சி, தங்கமாபுரிபட்டணம், வீரக்கல்புதுார் டவுன் பஞ்., ஆகிய, இரு இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம் சார்பில், 35.5 லட்சம் ரூபாய் செலவில் இரு சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது.அதற்காக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், கெம்பிளாஸ்ட் நிறுவன தலைவர் கஜேந்திரனுக்கு பாராட்டு தெரிவித்து பட்டயம் வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி., செல்வகணபதி, கெம்பிளாஸ்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
26-Sep-2024