குமரன் பிறந்தநாள் விழா
சேலம், கொடி காத்த, திருப்பூர் குமரனின், 121வது பிறந்த நாளை ஒட்டி, சேலம் மாநகர், அழகாபுரம் மண்டல பா.ஜ., சார்பில் நேற்று, 5 ரோடு ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மண்டல தலைவர் ராஜலட்சுமி, மாவட்ட பார்வையாளர் முருகேசன், பொதுச்செயலர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.