உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 41 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷக விழா

41 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷக விழா

ஆத்துார், ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில், 1900ல் கட்டப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அங்கு திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் தாமதமாகி வந்தது. பின் பேச்சு நடத்தி கும்பாபிஷேகத்துக்குப் பின் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 41 ஆண்டுக்கு பின், கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 5 நிலை கொண்ட, 56 அடி உயர ராஜகோபுரம், 30 அடி உயரத்தில், மூலஸ்தான விமான கோபுரம், 27 அடி உயரத்தில் கொடி மரம் அமைக்கப்பட்டது. அதன் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. மூலவர், ராஜகோபுர கலசங்கள் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள, 65 கலசங்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.அதேபோல் மேட்டூர், பி.என்.பட்டி, டி.எம்.பி., நகர், சின்னையரெட்டிதெருவில் உள்ள வெற்றி விநாயகர், நவக்கிரகம், பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷக விழா நடந்தது. அதில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ