உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மல்லுாரில் சுரங்கப்பாதை அமைக்க நில அளவீடு

மல்லுாரில் சுரங்கப்பாதை அமைக்க நில அளவீடு

பனமரத்துப்பட்டி, மல்லுார் - வீரபாண்டி சாலை குறுக்கே, சேலம் - கரூர் அகல ரயில்பாதை செல்கிறது. இதனால் தினமும், 10க்கும் மேற்பட்ட முறை, ரயில்வே கேட் மூடப்படுகிறது. பஸ், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் ரயில் பாதையை கடக்க, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை, மக்கள் நடத்தினர். அதன் பலனாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், சுரங்கப்பாதை அமைக்க அனுமதி அளித்து நிதி ஒதுக்கியது. தொடர்ந்து தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.நேற்று, சேலம் - கரூர் ரயில்பாதையில் மல்லுார், வேங்காம்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்க, நில அளவீடு பணி நடந்தது. சேலம் வருவாய்த்துறையினர், ரயில்வே அதிகாரிகள், இப்பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை