உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜி.கே.கரட்டூரில் மண் சரிவுகுடியிருப்புவாசிகள் கலக்கம்

ஜி.கே.கரட்டூரில் மண் சரிவுகுடியிருப்புவாசிகள் கலக்கம்

பனமரத்துப்பட்டி, டிச. 14-பனமரத்துப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி, ஜி.கே.,கரட்டூரில் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் மக்கள் பலர் வசிக்கின்றனர். அங்கு கடந்த வாரம் பெய்த மழையால், சிறு அளவில் மண் சரிவு ஏற்பட்டது. கடந்த, 11ல் மலையின் தெற்கு பகுதியில் மண் சரிவு ஏற்பட, மக்கள் அச்சமடைந்தனர். அன்று வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, அப்பகுதியை பார்வையிட்டார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு, 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கிறோம். மலை மீது குடிநீர் தொட்டி கட்ட, பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டது. அந்த பள்ளத்தில் மழைநீர் இறங்கி, மலையின் தெற்கு பகுதியில் நீர் கசிவு உண்டாகி மண் சரிவு ஏற்படுகிறது. பெரிய அளவில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாததால், குடும்பத்துடன் வீட்டில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி