மேலும் செய்திகள்
சக்தி மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
16-May-2025
தலைவாசல், வைகாசி திருவிழாவையொட்டி, தலைவாசல், நத்தக்கரையில் மகா மாரியம்மன் கோவிலில், கடந்த, 5ல், சக்தி அழைத்தல், மூப்பனார் கோவிலில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு அலகு குத்துதல், உருளுதண்டம், பால் குடம் எடுத்தல், அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று மாரியம்மன் தேர் திருவிழா நடக்கிறது.
16-May-2025