உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

வீரபாண்டி,சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி செல்லாண்டி அம்மன், முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி, கடந்த, 19ல் சிறப்பு அபிஷேகம், பூ மிதித்தல் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், 11:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.அதில், ஏராளமான பெண்கள், தலையில் மாவிளக்கை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.மாலையில் கரகம், அலகு குத்துதல் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு சத்தாபரணம் நடந்தது. இன்று அதிகாலை, கம்பம் பிடுங்குதல், மாலை எருதாட்டம், நாளை காலை, மஞ்சள் நீராட்டத்துடன் பண்டிகை நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ