உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசையும் தனியாருக்கு விட்டு விடுங்கள் தே.மு.தி.க., பொதுச்செயலர் கண்டனம்

அரசையும் தனியாருக்கு விட்டு விடுங்கள் தே.மு.தி.க., பொதுச்செயலர் கண்டனம்

மேட்டூர்: ''தமிழகத்தில், அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கு-வதால் மக்கள் பாதிக்கின்றனர். இனி அரசையும் தனியார் மய-மாக்கி விட்டால் நன்றாக இருக்கும்,'' என, தே.மு.தி.க., பொதுச்-செயலர் பிரேமலதா பேசினார்.தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, நேற்று மாலை சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மேட்-டூரில் ரத யாத்திரை மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதா-வது:சேலம் மாவட்டம் தே.மு.தி.க.,வின் கோட்டை. உங்கள் ஒவ்-வொருவரையும் நான் கேப்டனாக பார்க்கிறேன். கேப்டன் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அவரது கனவு, லட்சியத்தை நாம் வென்றெடுக்க வேண்டும். இங்கு கூடி-யுள்ள கூட்டம் குறைவாக இருக்கலாம். இந்த கூட்டம் மற்ற கட்சி-களை போல நுாறு, சோறு, பீருக்காக கூடும் கூட்டம் இல்லை. நமக்கு கூடியுள்ள கூட்டம், நேர்மையான தொண்டர்களை கொண்டதாகும்.தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்யவில்லை. சென்னையில் சுகாதார பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்-றனர். மேட்டூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் கட்டிய கடைகளில் வாடகை அதிகமாக உள்ளது. அதை நம்பி வாழ்ந்தவர்கள் வாழ்-வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேட்டூரில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போதை தமிழக-மாக மாறி வருகிறது. அரசு அனைத்து துறைகளையும், தனியா-ருக்கு தாரை வார்க்கும் பட்சத்தில், அரசையும் தனியார் மயமாக்கி விடலாம்.தே.மு.தி.க., அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும். அது மக்களுக்கு நல்லது செய்யும் கூட்டணியாக அமையும். தேர்தலுக்கு ஒன்பது மாதம் உள்ளது. தேர்தலின் போது மீண்டும் மேட்டூர் தொகுதிக்கு வருவேன். கேப்டன் பிறந்-தநாள் வறுமை ஒழிப்பு நாளாகும். இவ்வாறு பேசினார்.கட்சியின் பொருளாளர் சுதீஷ், அவை தலைவர் இளங்கோவன், சேலம் மேற்கு மாவட்ட செயலர் சுரேஷ்பாபு, மேட்டூர் நகர செயலர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கொளத்துார், மேச்சேரியிலும் பிரே-மலதா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர் மத்தியில் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ