நுாலக அலுவலர் இடமாற்றம்
சேலம்,சேலம் மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார், விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலக அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் சேலம் நுாலக ஆய்வாளர் பாலசுப்ரமணியத்துக்கு, கூடுதல் பொறுப்பாக, சேலம் மாவட்ட நுாலக அலுவலர் பணி வழங்கப்பட்டு, அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான உத்தரவை, பொது நுாலகத்துறை இணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் பிறப்பித்துள்ளார்.