வனத்துக்குள் வாழ்க்கை 100 மரக்கன்றுகள் நடல்
சேலம்:சேலம், செட்டிச்சாவடியில் மரக்கன்றுகள் நடுதல், சட்ட விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநில மற்றும் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் நடந்த விழாவுக்கு, கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.மாவட்ட முதன்மை நீதிபதி ராமகிருஷ்ணன், தலைமை வகித்து பேசியதாவது:சுற்றுச்சூழலை மேம்படுத்த மணல்மேடு தொடங்கி டால்மியா போர்டு வரை, சாலையோரம், 100 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இப்பணி, 'வனத்துக்குள் வாழ்க்கை' பெயரில் நடக்கிறது. இது, மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறை. அதை மேம்படுத்த நீதிமன்ற வளாகம், அரசுத்துறை வளாகம், சாலையோரங்களில் மரக்கன்று நட்டு பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில், ''பசுமையை பாதுகாக்க, மேம்படுத்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.நீதிபதிகள் தீபா, ஆனந்தன், சார்பு நீதிபதி திலகேஸ்வரி, கூடுதல் சார்பு நீதிபதி அம்பிகா, முதலாவது கூடுதல் முன்சீப் சதீஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.