மின் கம்பத்தில் மோதிய லாரி
கெங்கவல்லி, கெங்கவல்லி, நடுவலுாரில் தனியார் வீட்டுமனை பகுதியில், கான்கிரீட் தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது. நேற்று மதியம், டிப்பர் லாரியில், கான்கிரீட் கலவை எடுத்துச்சென்றனர். டிரைவர் கார்த்திக், 28, ஓட்டினார். வீட்டுமனை பாதையில் சென்றபோது, மின் கம்பத்தில், லாரி மோதி சாய்ந்தது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பினர். மின் கம்பம் சேதமாகி, மின்தடை ஏற்பட்டது. கெங்கவல்லி மின்வாரிய பணியாளர்கள், கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.