உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலிடெக்னிக்கில் காதல்; ஜோடி போலீசில் தஞ்சம்

பாலிடெக்னிக்கில் காதல்; ஜோடி போலீசில் தஞ்சம்

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே கருத்தானுாரை சேர்ந்தவர் சுரேஷ், 21. குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் தனுஸ்ரீ, 19. இவர்கள் வனவாசி அரசு பாலிடெக்னிக்கில், 3ம் ஆண்டு படிக்கின்றனர். வெவ்வேறு பிரிவை சேர்ந்த இவர்கள் காதலித்தனர். இது பெண் வீட்டுக்கு தெரித்து, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று கொங்கணாபுரம் அருகே புதுபழநி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின் பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை வரவழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் சுரேஷ், அவரது பெற்றோருடன், பெண்ணை போலீசார் அனுப்பிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை