உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்சேலம், நவ. 29-சேலம் மாவட்ட மா.கம்யூ., சார்பில், சேலம், கோட்டை, எஸ்.பி.ஐ., வங்கி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் சண்முகராஜா தலைமை வகித்தார். அதில், அதானி குழும துணை நிறுவனமான, அதானி கிரின் எனர்ஜி நிறுவனம், ஒடிசா, தமிழகம், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேச மாநிலங்களில், முதலீடுகளை பெற, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதன்படி வழக்குப்பதிந்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுதல்; அதானியை கைது செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். வடக்கு மாநகர செயலர் பிரவீன்குமார், கிழக்கு மாநகர செயலர் பச்சமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ