மால்கோ வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
மேட்டூர்: மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். மாணவி தாரணாஸ்ரீ, 497, மாலினி, 496, தரணீஷ், 495 மதிப்பெண்கள் முறையே பெற்று, முதல் மூன்று இடங்களை பெற்றனர். இதில் தாரணாஸ்ரீ, சங்ககிரி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.தவிர, 490 மதிப்பெண்களுக்கு மேல், 9 மாணவர்கள், 450க்கு மேல், 60 மாணவர்கள், 400க்கு மேல், 126 மாணவர்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில், 2 பேர், அறிவியலில், 12 பேர், சமூக அறிவியலில், 8 பேர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாக குழு அலுவலர்கள் சரவணன், கண்ணன், மணி, முதல்வர் நாகேந்திரபிரசாத் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.