ரேஷன் ஊழியரை தாக்கியவர் கைது
வாழப்பாடி: வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், 45. மன்-னாய்க்கன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார். அங்கு நேற்று முன்தினம் மதியம், 1:45 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 54, பொருட்கள் வாங்க வந்தார். அப்போது கார்டு இல்லாமல் பொருட்கள் கேட்-டுள்ளார். இதில் அவருக்கும், சசிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்-பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், சசிகுமாரை தாக்-கியுள்ளார். இதுகுறித்து சசிகுமார் புகார்படி, வாழப்பாடி போலீசார் நேற்று, செந்தில்குமாரை கைது செய்தனர்.