மேலும் செய்திகள்
மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன் கைது
17-Jul-2025
இடைப்பாடி, இடைப்பாடி அருகே தாதாபுரம் மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 35. இவர் சேலம் இரும்பாலையில் பி.வி.சி., பைக் கடை வைத்துள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜலகண்டாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான, பி.வி.சி., பைப் கம்பெனியில் பைப்புகளை மொத்தமாக எடுத்து, அதை கடைகளுக்கு சில்லறை வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அந்த கம்பெனியில், வாகனங்களை லோடு ஏற்றும் வேலை செய்து வந்த தாதாபுரம் மேல் தெருவை சேர்ந்த விஜயகுமார், 42, என்பவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை பைப் கம்பெனி நிர்வாகத்தினர் வேலையில் இருந்து நிறுத்தினர். இதற்கு மணிகண்டன் தான் காரணம் என விஜயகுமார் நினைத்து கொண்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், தன் வீட்டின் முன் ஆக்டிவா ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு துாங்க சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த போது ஸ்கூட்டி எரிந்து கிடந்துள்ளது. இடைப்பாடி போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் இரவுல் விஜயகுமார், மணிகண்டன் வீட்டருகே நடமாடியதும், லாரி இன்ஜின் ஆயிலை பிளாஸ்டிக் கவரில் கட்டியபடியும், ஒரு ஹோட்டலில் இருந்து தீப்பெட்டியை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
17-Jul-2025