உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெயின்டர் முகத்தை சிதைத்து கொன்றவர் கைது

பெயின்டர் முகத்தை சிதைத்து கொன்றவர் கைது

மேட்டூர், மேட்டூர், சேலம் கேம்ப், பாரதி நகரை சேர்ந்த பெயின்டர் மணிகண்டன், 27. அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த மற்றொரு பெயின்டர் வினுகுமார், 20. இவருக்கு திருமணமாகவில்லை. மணிகண்டனுக்கும், வினுகுமாருக்கும் இடையே அப்பகுதியில், 'யார் பெரியவர்' என்ற 'ஈகோ' பிரச்னை இருந்தது.இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மோதல் முற்றிய நிலையில் கடந்த, 15 இரவு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மணிகண்டனை, வினுகுமார் கத்தியால், அவரது முகத்தில் பல இடங்களில் வெட்டி, கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி விட்டார். கருமலைக்கூடல் போலீசார் விசாரித்து, வினுகுமாரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை