தம்பியை கொன்றவர் கைது
இடைப்பாடி, கொங்கணாபுரம் அருகே மட்டம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துசாமி, 63. இவருக்கு, 3 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். இவர்களது தந்தை பெயரில், 1.50 ஏக்கர் நிலம், தாய் பெயரில், 50 சென்ட் நிலம் இருந்தது. அந்த சொத்தை பங்கிட்டு கொள்வதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் முத்துசாமியின் அண்ணன் க.குப்புசாமி, 65, அவரது மகன் கு.குப்புசாமி, மருமகள் கவிதா ஆகியோர், கடந்த, 13ல் முத்துசாமியை கொலை செய்தனர். மறுநாள், கொங்கணாபுரம் போலீசார், கு.குப்புசாமி, அவரது மனைவி கவிதாவை கைது செய்தனர். இந்நிலையில் முத்துசாமியின் அண்ணனான, க.குப்புசாமியை, நேற்று போலீசார் கைது செய்தனர்.