உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 8 þ¼ïகிலோ கஞ்சா கடத்தியவர் கைது

8 þ¼ïகிலோ கஞ்சா கடத்தியவர் கைது

சேலம், சேலத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், நேற்று நிலவாரப்பட்டியில், ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த, லாரி, 'லோடுமேன்' ஆக பணிபுரியும் சதீஷ், 35, என தெரிந்தது. அவரது பையை சோதனை செய்தபோது, 8 கிலோ இருந்தது. அதுகுறித்து விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து பஸ் மூலம் கடத்தி வந்து விற்க முயன்றது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சதீைஷ, செவ்வாய்ப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த போலீசார், அவரை கைது செய்து கஞ்சாவை யாரிடம் வாங்கினார், கூட்டாளிகள் யார் யார் என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி