உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது

மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது

சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டை, முத்துசாமி தெருவை சேர்ந்தவர் வசந்தா, 75. நேற்று காலை, 7:30 மணிக்கு, வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வானத்தில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள், வசந்தா அணிந்திருந்த, 4 பவுன் சங்கிலியை பறித்தனர். வசந்தா கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், மர்ம நபர்கள் தப்பினர். இதுகுறித்து வசந்தா புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர். அதில், வாடகைக்கு கார் ஓட்டி வந்த, காடையாம்பட்டியை சேர்ந்த அஜித்குமார், 26, கடன் தொல்லையால் முதல்முறையாக சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை