உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முட்புதரில் கஞ்சா பதுக்கியவர் சிக்கினார்

முட்புதரில் கஞ்சா பதுக்கியவர் சிக்கினார்

சேலம்:சேலம், அன்னதானப்பட்டி போலீசார், தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி சென்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 42, என்பதும், விற்பனைக்கு அங்குள்ள முட்புதரில், 1.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. அவரது வாக்குமூலப்படி, சாக்கு பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சண்முகத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி