உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 8 பவுன் நகையை பறித்தவர் கேமராவில் சிக்கினார்

8 பவுன் நகையை பறித்தவர் கேமராவில் சிக்கினார்

சேலம், சேலம், அரசமரத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 69. சின்னக்கடை வீதியில் ஜவுளிக்கடை நடத்துகிறார். இவரது மனைவி கலாவதி, 65. நேற்று முன்தினம் இரவு தம்பதியர், கடையை பூட்டிய பின், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.மர்ம நபர், கலாவதி அணிந்திருந்த, 13 பவுன் டாலர் சங்கிலியை பறிக்க முயன்றார். கலாவதி கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட, கணவர், மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரது கையில் சிக்கிய, 8 பவுன் நகையுடன், வேகமாக தப்பி ஓடி மறைந்துவிட்டார்.மேலும் கலாவதி பிடித்துக்கொண்டதில், 5 பவுன் தப்பியது. இதுகுறித்து சுரேஷ் புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபரின் உருவம் பதிவாகி இருந்தது. இதனால் அவரை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி