உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்தவர் பலி

பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்தவர் பலி

மேட்டூர், இடைப்பாடி, வெள்ளாளபுரம், சின்னப்பம்பட்டி காட்டுவளவை சேர்ந்த லாரி டிரைவர் குமார், 50. அவரது தம்பி சேட்டு, 48. இவர்கள், தாய் தனலட்சுமியுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வலதுகால் ஊனமான சேட்டு, வெல்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பிரபு என்பவரிடம், பூலாம்பட்டியில் வெல்டிங் வேலைக்கு சென்றார். இரவு, 8:00 மணிக்கு சின்னப்பட்டி செல்ல பஸ் கிடைக்காமல், மேட்டூர் தெர்மல் அருகே நின்று கொண்டிருப்பதாக, சேட்டு, அவரது தாயிடம் மொபைலில் கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு சேட்டுவின் உடல், அனல்மின் நிலையம் அருகே உபரி நீர் வெளியேறும் காவிரியாற்றில் மிதந்தது. கருமலைக்கூடல் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மது அருந்தும் பழக்கமுடையவர் என்பதால், 'போதை'யில் பாலத்தில் இருந்து தவறி, காவிரியாற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி