உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓவர் குளிரால் ஜவுளி கடை ஷட்டரை திறந்து துாங்கிய ஆசாமி; ஓனருக்கு வியர்த்து போச்சு

ஓவர் குளிரால் ஜவுளி கடை ஷட்டரை திறந்து துாங்கிய ஆசாமி; ஓனருக்கு வியர்த்து போச்சு

ஆத்துார்:இரவில், ஓவர் குளிரால் நடுங்கிய தொழிலாளி, ஜவுளி கடையின் ஒரு பக்க ஷட்டரை திறந்து உள்ளே சென்று படுத்து துாங்கினார். கடையை திறக்க காலையில் வந்த உரிமையாளர், துாங்கும் ஆசாமியை பார்த்து வியர்த்து போனார்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் மனைவி பாக்கியம், 37; தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்தபோது, உள்ளே ஒருவர் துாங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த தம்மம்பட்டி போலீசார், கடையில் இருந்தவரை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சீராப்பள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல், 37, என தெரிந்தது.'திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தம்மம்பட்டி வந்தேன். அங்கிருந்து ராசிபுரத்துக்கு பஸ் இல்லை. குளிர் அதிகமாக இருந்தது. துாக்கமும் கண்ணை கட்டியதால், படுக்க இடம் தேடினேன்.அப்போது ஜவுளி கடையின் ஒருபக்க ஷட்டர் மட்டும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் மற்றொரு பக்க ஷட்டரை சற்று உயர்த்தி உள்ளே சென்று துாங்கி விட்டேன்' என, சக்திவேல் தெரிவித்தார்.அதேசமயம் கடைக்குள் எதுவும் திருட்டு போகாததால், அவரை எச்சரித்து போலீசார் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை