மேலும் செய்திகள்
மன்மோகன் சிங் மறைவு; ஊட்டியில் காங்., அஞ்சலி
28-Dec-2024
ஆத்துார்: காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கட்சியினர், மன்மோகன்சிங் படத்துக்கு மாலை அணிவித்து, பூக்கள் துாவி மரியாதை செலுத்-தினர். ம.தி.மு.க., மாவட்ட செயலர் கோபால்ராசு, தி.மு.க., நகர செயலர் பாலசுப்ரமணியம், த.மா.கா., மாநில மகளிர் அணி நிர்-வாகி சத்யா, கம்யூ., வி.சி., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.அதேபோல் ஓமலுாரில் காந்தி சிலை முன், மன்மோகன் சிங் படத்துக்கு, ஓமலுார் கிழக்கு வட்டார காங்., தலைவர் சக்திவேல் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு காங்., தொழிலாளர் யுனியன் மாநில துணைத்தலைர் சந்திரசேகரன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் கணேசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் சேலம், முள்ளுவாடி கேட் அருகே மன்-மோகன்சிங் படத்துக்கு, காங்., கட்சியினர், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
28-Dec-2024