உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மார்கழி பெருவிழா இன்று தொடக்கம்

மார்கழி பெருவிழா இன்று தொடக்கம்

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடி கம்பன் கழகம் சார்பில், 10ம் ஆண்டாக மார்கழி பெருவிழா இன்று தொடங்கி, ஜன., 1 வரை நடக்கிறது. வேலநத்தம் செங்குந்தர் மண்டபத்தில் நடக்கும் விழாவில், இன்று, 'தமிழ் வளர்க்கும் திருவாவடுதுரை' தலைப்பில், சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த செங்குட்டுவன் பேசுகிறார். நாளை, 'இன்றும் என்றும் கம்பன்' தலைப்பில் திருச்சி சாத்தம்மை ப்ரியா பேச உள்ளார்.வரும், 28ல், 'தவம் செய்த தவம்' தலைப்பில் புதுக்கோட்டை பாரதி; 29ல், 'மூர்த்தி தலம் தீர்த்தம்' தலைப்பில் சிதம்பரம் பனசை மூர்த்தி; 30ல், 'கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்' தலைப்பில், குடியேற்றம் சீனி சம்பத்; 31ல், 'கம்பனும் வாலியும்' தலைப்பில் சேலம் சங்கர நாராயணன்; ஜன., 1ல், 'உலகெலாம் நிறுத்தி நின்றான்' தலைப்பில் அபுதாபி பாஸ்கர் பேச உள்ளனர். மேலும், இன்று முதல் ஜன., 1 வரை, தினமும் இரவு, 7:00 மணிக்கு மார்கழி சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !