மின்விளக்குகளை இயக்கி மேயர் துவக்கிவைப்பு
சேலம், மே 11சேலம், அஸ்தம்பட்டி, 6வது வார்டில், ஏ.டி.சி., நகர் முதல் சட்ட கல்லுாரி எல்லை வரை சென்டர் மீடியன் பகுதியில், அலங்கார வளைவுகளுடன் கூடிய, 68 மின்கம்பங்கள் நிறுவி, அதில், 136 எண்ணிக்கைகள் கொண்ட, 120 வாட்ஸ் எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தும் பணி, 93 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து நிறைவு பெற்றது. அதை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன், நேற்று, இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். துணை மேயர் சாரதாதேவி, துணை கமிஷனர் பாலசுப்ரமணியன், மண்டல குழு தலைவி உமாராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.