உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவ மாணவி தற்கொலை

மருத்துவ மாணவி தற்கொலை

சேலம், கோவை கீழமேடு, செங்கப்பா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 49. மொத்த இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவரது தொழிலுக்கு மகன் ரோகித், 26, உதவியாக உள்ளார். செந்தில்குமாரின் மனைவி மணிமேகலை, 43, பல் டாக்டர். இவர்களுடைய மகள் லக்சன்யா, 21, சேலம், மதுரையான்காட்டில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.மகளுடன் தங்கியிருக்கும் தாய், அங்குள்ள தனியார் பல் மருத்துவக்கல்லுாரியில் டாக்டராக பணி செய்து வருகிறார். இவர், நேற்று காலை பணிக்கு சென்றுவிட்டார். பகல், 1:30 மணியளவில், விடுதி மின்விசிறியில் லக்சன்யா துாக்கில் தொங்கியதை பார்த்து, அப்பகுதியை சேர்ந்த சீனிவாசன், 54, அதிர்ச்சியடைந்தார். உடனடியாக லக்சன்யாவை மீட்டு, அவர் படிக்கும் மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றார். பரிசோதனையில், வழியிலேயே மாணவி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆட்டையாம்பட்டி போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி