உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து இறப்பு

மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து இறப்பு

இடைப்பாடி, இடைப்பாடி, தாதாபுரத்தில் உள்ள, சரபங்கா ஆற்றில் ஒரு சடலம் நேற்று மதியம் மிதந்தது. இதை அறிந்து, அங்கு சென்ற இடைப்பாடி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இறந்தவர், இடைப்பாடி அருகே ஒட்டப்பட்டியை சேர்ந்த, சின்னபையன், 82. வயது முதிர்வால் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அடிக்கடி வீட்டை விட்டு மாயமாவதும், திரும்பி வீட்டுக்கு வருவதுமாக இருந்தார். தற்போது ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை