உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை

நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்-தினம், 6,384 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 6,198 கனஅடியாக சற்று சரிந்தது. அணை நீர்மட்டம், 117.57 அடியாகவும், நீர் இருப்பு, 89.64 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. பாசனத்துக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நிரம்ப இன்னும், 4 டி.எம்.சி., மட்டும் தேவை. டெல்டா மாவட்டங்-களில் பரவலாக மழை பெய்துள்ளதால், பாசன நீர் தேவை குறைந்த நிலையில் அணைக்கு வரும் நீரின் பெரும் பகுதி சேமிக்-கப்படுகிறது. இதனால் நடப்பாண்டில், 3ம் முறை மேட்டூர் அணை நிரம்புமா என, பாசன விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ