உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை ஸ்திரத்தன்மை மாநில பாதுகாப்பு குழு ஆய்வு

மேட்டூர் அணை ஸ்திரத்தன்மை மாநில பாதுகாப்பு குழு ஆய்வு

மேட்டூர் :தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 90 அணைகள், மின்கழக கட்டுப்பாட்டில், 26 அணைகள் உள்ளன. அந்த அணைகள் குறித்து, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி, கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் கிருஷ்ணகுமார்(வடிவமைப்பு), திலீபன்(பண்டகசாலை) உள்பட, 13 பேர் அடங்கிய, மாநில, 7வது அணை பாதுகாப்பு அமைப்பு குழுவினர், நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு செய்தனர்.வலதுகரையில் உள்ள மண் கரை, நீர்கசிவு சுரங்கம், இடதுகரை, உபரிநீர் வெளியேற்றும், 16 கண் மதகு, அங்கு, 1, 3ம் மதகுகளில் நடக்கும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். அப்போது குழுவினர் கேட்ட சந்தேகங்களுக்கு, அணை பொறியாளர்கள் உரிய விளக்கம் அளித்தனர்.இதுகுறித்து குழுவினர் கூறுகையில், 'இதுவரை, 81 அணைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், 82வது அணையாக மேட்டூர் ஆய்வு செய்யப்பட்டது. அணை ஸ்திரத்தன்மை, செய்ய வேண்டிய கட்டுமான பணி குறித்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்படும். அதன்படி அணைகள் பாதுகாப்புக்கு, அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றனர்.மேல்சரபங்கா வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் அணை மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கரையோரம்நில அதிர்வு?மேட்டூர் அணை, நடப்பாண்டில், 4ம் முறையாக நிரம்பும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு, 7:50 மணிக்கு, அணை கரையோர பகுதியில் உள்ள கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சியில் உள்ள பாலவாடி, காவேரிபுரம், சத்யா நகர், நாயம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. குறிப்பாக திடீரென கேட்ட பலத்த சத்தத்தை, மக்கள் உணர்ந்தனர். காவேரிபுரம், கருங்கல்லுார் பகுதி மக்களுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.இருப்பினும் மேட்டூர் அணை வலதுகரை பகுதியிலுள்ள கட்டடத்தில், நில அதிர்வுகளை பதிவு செய்யும், சீஸ்மோகிராப் கருவியில், நில அதிர்வு ஏதும் பதிவாகவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை