உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்மட்டம் 94.65 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 94.65 அடியாக உயர்வு

மேட்டூர், அக். 19-தொடர் நீர் வரத்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 94.65 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30 அணை நிரம்பிய நிலையில் பாசன நீர்திறப்பு அதிகரித்ததால் கடந்த, 13ல் நீர்மட்டம், 89.26 அடியாக சரிந்தது. அதன் பின்பு மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து, டெல்டா மாவட்டங்களில்பரவலாக மழை பெய்ததால் நீர்திறப்பு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.நேற்று முன்தினம் வினாடிக்கு, 19,475 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 19,090 கனஅடியாக சற்று சரிந்தது. நீர்வரத்தை விட, திறப்பு குறைந்ததால் நேற்று அணை நீர்மட்டம், 94.65 அடி, நீர் இருப்பு, 58.12 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. கடந்த ஆறு நாட்களில் அணை நீர்மட்டம், 5 அடி, நீர் இருப்பு, 7 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி