உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 21,135 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 13,483 கனஅடியாக சரிந்தது. அதேநேரம் வினாடிக்கு, 16,500 கனஅடியாக இருந்த பாசன, கால்வாய் நீர்திறப்பு, நேற்று காலை, 10:00 மணி முதல், 14,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால் நேற்று முன்தினம், 119.06 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 118.87 அடியாக சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை