மாட்டிறைச்சி கடைகளால் மேட்டூர் மக்கள் பாதிப்பு
சேலம், மேட்டூர், 29வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:எம்.ஜி.ஆர்., நகரில் எரிவாயு தகனமேடை அருகே, எந்த அனுமதியும் இன்றி, இரு தகர கொட்டகைகள் அமைத்து, மாட்டிறைச்சி விற்பனை நடக்கிறது. அதே இடத்தில் மாடுகளை வதை செய்து, இறைச்சி விற்பனை நடப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கழிவை, அங்குள்ள காவிரியாற்றில் கொட்டுகின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். மேட்டூர் நகராட்சி, உணவு பாதுகாப்புத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுத்து, மக்கள் பாதிப்பை போக்க வேண்டும்.