24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை
சேலம்: ''அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து, 24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்-ளது,'' என, அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பார்-வையிட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறி-யப்பட்டன. அங்கு முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு நடவ-டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்காடு பிரதான சாலை, 60 அடி பாலம் அருகே, சின்னகல்வராயன் மலை பகுதியில், சாலை குறுக்கே மரம் விழுந்தது. உடனே அகற்றி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயாராக வைக்கப்-பட்டுள்ளன. சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை, உள்ளாட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்ய வேண்டும். மின் கட்டமைப்பு பாதிப்பு-களை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். தேவையான இடங்-களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கழிவுநீர் கால்-வாய்கள், நீர்வழித்தடங்களில் தங்குதடையின்றி தண்ணீர் செல்ல, அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி, அங்கன்வாடி கட்டடங்களை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து குழந்தைகள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்-படுத்த வேண்டும்.ஆபத்தான நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்-டுள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் குளோரினேஷன் செய்யப்படுவதை உறுதி செய்து, சுகாதார முறையில் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து, 24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்-ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., மேனகா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.