உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 67 பேருக்கு பட்டா அமைச்சர் வழங்கல்

67 பேருக்கு பட்டா அமைச்சர் வழங்கல்

ஆத்துார், தலைவாசல் தாலுகா பட்டுத்துறை, சிறுவாச்சூர் தெற்கு, சிவசங்கராபுரம் நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலப்பட்டா வழங்கும் விழா, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, தலா, 3 ஏக்கர் வீதம், 10.62 கோடி ரூபாய் மதிப்பில், 201 ஏக்கர் நிலத்துக்கு, 67 பேருக்கு பட்டா வழங்கினார்.எம்.பி.,க்கள் சிவலிங்கம், மலையரசன், மாதேஸ்வரன், சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, நரசிங்கபுரம் நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ