50 சதவீதம் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் ராஜேந்திரன் அறிவுரை
ஓமலுார், சேலம் மத்திய மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதி யில் நேற்று அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆய்வுக்கூட்டம், பாக முகவர்கள் கூட்டம் பல்வேறு ஒன்றியங்களில் நடந்தது.காடையாம்பட்டி தி.மு.க., நகர அலுவலகம் அருகே, ஒன்றிய செயலர் அறிவழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து ஒன்றியங்களிலும், 50 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையை கொண்டு வர வேண்டும். அதற்கு கட்சி யினர் தீவிரமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொகுதி பார்வையாளர் சுகவனம், நகர செயலர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து காடையாம்பட்டி மத்தியம், மேற்கு, ஓமலுார் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய ஒன்றியங்களில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.