உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாயமான மாணவர்கள் ஓமலுாரில் மீட்பு

மாயமான மாணவர்கள் ஓமலுாரில் மீட்பு

ஓமலுார்:ஓமலுார், தாத்தியம்பட்டியை சேர்ந்த, பெயின்டர் தங்கமுத்து மகன் கணித், 15. காமலாபுரம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த, கூலித்தொழிலாளி செந்திலின் மகன் சபரிவாசன், 15. தாராபுரம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரு சிறுவர்களும் மாயமாகினர். இருவரது பெற்றோரும், ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.நேற்று மதியம் இரு சிறுவர்களும், ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் அழுதபடி நின்றிருந்தனர். அவர்களை பார்த்த, தாத்தியம்பட்டியை சேர்ந்தவர்கள், சிறுவனின் பெற்றோருக்கும், ஓமலுார் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகம் சென்று, சிறுவர்களை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தார். முன்னதாக விசாரித்ததில், இரவு முழுதும் சேலம் பஸ் ஸ்டாண்டில் படுத்துவிட்டு, மறுநாள் பயந்துபோய் பஸ் ஏறி, ஓமலுார் வந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ