உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் கட்டணம் தொடர்பாக கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு

குடிநீர் கட்டணம் தொடர்பாக கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு

பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்துகளுக்-கான கூடுதல் குடிநீர் கட்டணத்தை, சிப்காட் தொழிற்சாலைகளே செலுத்த வலியுறுத்தி, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், கலெக்டர் ராஜகோபால் சுங்கராவிடம் மனு அளித்தார். கடலூர் மாவட்டத்தில், பசுமை தீர்ப்பாயம் விதித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, மனுவில் அவர் கூறியிருப்பதாவது,சிப்காட் சாய ஆலை கழிவு நீரால் பாதிக்கப்பட்ட கம்பளியம்-பட்டி, பொன்முடி, மூங்கில்பாளையம், பட்டக்காரம்பாளையம், ஈங்கூர், பனியம்பள்ளி, வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பா-ளையம், சிறுகளஞ்சி கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும். அதற்கான செலவு தொகையை சம்பந்-தப்பட்ட சிப்காட் தொழிற்சாலைகள் ஏற்க வேண்டும்.சிங்காநல்லுாரில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க மக்கள் பங்களிப்பு, 2.72 லட்சம் ரூபாய் செலுத்த வேண்-டியுள்ளதால், தொழிற்சாலைகளில் இருந்து பெறும், சி.எஸ்.ஆர்., நிதி மூலம் ஈடு கட்ட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !