வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதல் முதலாக வசூல் செய்யும் போதே பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.
சேலம் : பணம் இரட்டிப்பாக தருவதாகக் கூறி முதலீடு பெற்ற விவகாரத்தில், அறக்கட்டளை நிர்வாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பணியாளர்கள், ஏஜன்டுகளிடம் போலீசார் விசாரிக்கின்றனர். வேலுாரைச் சேர்ந்த விஜயபானு, 48, சேலம், அம்மாப்பேட்டை, சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை நடத்தினார். பணம் இரட்டிப்பாக தருவதாகக் கூறி, ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தார்.பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து, அங்கீகாரம் இல்லாத திட்டத்தில் முறைகேடாக முதலீடு பெறப்பட்ட பணம், நகைகளை பறிமுதல் செய்தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயபானு உள்ளிட்ட மூவரை சிறையில் அடைத்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட, 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், டி.ஆர்.ஓ., ரவிக்குமார் முன்னிலையில் நேற்று கருவூலத்தில் ஒப்படைத்தனர். அறக்கட்டளையில் பணிபுரிந்த, வேலுாரைச் சேர்ந்த சையத் முகமது, 44, சென்னை, குன்றத்துார் மைக்கேல், 34, சேலம், அம்மாப்பேட்டை துரைாஜ், 31, கிச்சிப்பாளையம் ஜோஷ்வா, 23, ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.விஜயபானுவுக்கு ஆதரவாக, அம்மாப் பேட்டை, பொன்னம்மாபேட்டை, வீராணம், மன்னார்பாளையம், அயோத்தியாபட்டணம், மாசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பலரும் ஏஜன்டுகளாக பணிபுரிந்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
முதல் முதலாக வசூல் செய்யும் போதே பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.