ஓய்வு எஸ்.ஐ., வீட்டில் மொபட் திருட்டு
ஆத்துார், நரசிங்கபுரம், அண்ணா தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 55. எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் வீடு முன், 'டியூட்' மொபட்டை நிறுத்தியிருந்தார். நேற்று காணாததால், வீட்டில் இருந்த, 'சிசிடிவி'யை பார்த்துள்ளார். அதில் மர்ம நபர், வீட்டின் முன்பிருந்த மின்விளக்குகளை அணைத்துவிட்டு, மொபட்டை திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து சவுந்தரராஜன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.